Thursday, August 28, 2008

உலகம் ஒரு கடலை உருண்டை....

இன்று ஒரு புது அனுபவம்.... பகிர்ந்து கொள்வதில் சற்று யோசனை... சரி என்று பட்டால் இன்ஷா அல்லாஹ் பகிர்ந்து கொள்கிறேன்...

Sunday, August 03, 2008

புதிய பயணம்

இங்கு வந்து 5 வருடங்கள் முடிய இன்னும் சில (11) மணி நேரங்கள் தான் குறைவு...
இன்னும் இரு நாட்களில் புதிய பயணம்... இந்த 5 வருடங்களில் எண்ணிலடங்கா எத்தனை மாற்றங்கள்... எத்தனை அனுபவங்கள்... மகிழ்ச்சியான துன்பமான அனுபவங்கள்... சந்தோஷம்... சோகம்... வெற்றிகள்... தோல்விகள்... ஏமாற்றம்... சமரசம்... சமாதானம்... சீற்றம்... சினம்... அமைதி... கோபம்... ஆத்திரம்... பிரிவு... இழப்பு... அழுகை... சிரிப்பு... தெளிவு... குழப்பம்... அன்பு... பகைமை... சத்தியம்... அசத்தியம்... துணிவு... பயம்... சோம்பேறித்தனம்... உழைப்பு... தூக்கமில்லா நாட்கள்.... பொழுது போக்கிய நாட்கள்... விவேகமான விவாதங்கள்... வெட்டியான விவாதங்கள்... மாணவனாய்.... ஆசிரியனாய்.... புதிப்பிக்கப்பட்ட உறவுகள்... துண்டித்துப்போன உறவுகள்... புதிய நண்பர்கள்... (கூடவே வேண்டாதவர்களும்)... புதிபபிக்கப்பட்ட நட்புகள்... போலி நட்புகள்... நல்ல நட்பு... நன்றிக்கான வாய்ப்பைக்காட்ட காத்திருக்க வைத்த நட்புகள்... வருத்தப்பட வைத்த நட்புகள்... மனநிறைவு... மனவருத்தம்... சிந்தனையில் மாற்றம்... நடைமுறையில் மாற்றம்...


சரி சரி... நிறுத்து அப்டிங்கரீங்களா... நிறுத்திட்டன்...
ஏதோ எழுத தோன்றியது எழுதி விட்டேன்... இறைவன் நாடினால்... விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்... (நல்ல) பல அனுபவங்களை...

ஒரு சுவாரசியமான விசயம் என்னவெனில்...
நான் இங்குவந்த ஆகஸ்டு 3 ஞாயிறு... இந்த வருட ஆகஸ்டு 3ம் ஞாயிறுதான் :-)

Wednesday, July 30, 2008

பசி ருசி அறியாது!!!


என்னங்க அதிசயமா பாக்குறீங்க.... புரியுது... என்னடா எப்பவும் ஏதோ கிறுக்குத்தனமா கிறுக்கிட்டு இருப்பான்... இப்ப படம் போட்டுருக்கானே அப்டினா?...

சரி சரி... இதுக்கு என்ன பேருன்னு கேக்குறீங்களா... அதெல்லாம் தெரியாது... எனக்கு சூரப்பசி... வீட்டுக்கு வந்தா ஒன்னும் இல்ல... சரி எதாச்சும் சீக்கிராம செஞ்சு சாப்டலாம்னு குளிர்சாதனப்பெட்டியில் பார்த்தா... எதுவும் சரிப்பட்டு வரல... அப்பறமா உரைநீர் (Freezer) பொட்டியில என்ன இருக்குன்னு தேடினா உரை சமோசா (Frozen Samosa) கண்ணுல பட்டுச்சு... சரின்னு எதாச்சும் பண்ணலாம்னு...

வாணலில எண்ணைய காய வச்சு... நுண்ணலைல (Microwave) சுட வச்ச சமோசாவ... பிச்சுப்போட்டு... அப்பறம்... கொஞ்ச நேரம் வதக்கி... வெளில எடுத்து... அதுல பாதில கொஞ்சம் சிவப்பு வெங்காயம் மற்றும் தக்காளி வெட்டி போட்டு... சூட்டடுப்புல (Conventional Oven) ஒரு 10 நிமிடம் வச்சு... மீதி பாதில ஒரு முட்டைய போட்டு... சமைச்சு... ரெண்டையும் கலந்ததுதான் நீங்க பாக்குற படம்..

சாப்பாடுன்னா... பாக்க... மணக்க... சுவைக்க... நல்ல இருக்கணும்னு சொல்லுவாங்க... என்ன பொருத்தவரைக்கும்... மூணுலயுமே தேர்ச்சி பெற்று விட்டது... (பசி ருசி அறியாது!!!)

சரிங்க எனக்கு பசிக்குது... நான் போயி சாப்டுறேன்... முடிஞ்சா நீங்களும் இப்பவே வாங்க... தீர்ந்து போறதுக்குள்ள... பகிர்ந்துப்போம்....

சரி என்ன பேருன்னு எதாச்சும் சொல்லிட்டுப்போங்க...
என்ன கேட்டா... கொத்து பொராட்டா மாதிரி... கொத்து சமோசா... ?...

Tuesday, July 22, 2008

சுற்று வெள்ளி

கும்மியிருட்டில் கூடியிருந்த குழந்தைகள்
மின்சாரமில்லா குக்கிராமத்தின் சுள்ளான்கள்

மினிக்கிப்பூச்சியின் மின்சார சிமிட்டலும்
வான வெள்ளியின் விண்மீன் வெளிச்சமும் தான்
பார்வையின் ஆதாரம் இந்தப்பாலகர்களுக்கு

பக்கீறு எங்க இருக்க... நண்பனின் அம்மாவின் குரல்...
சித்திக்கு எங்க போன... நண்பனின் அத்தாவின் குரல்...
சவ்கறு எங்க வாவா சுத்துற... நன்னிம்மாவின் குரல்...

திடீரென மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் போல... தூரத்தில் ஏதோ...
வானத்தின் மின்மினிப்போச்சி என்றானோ... பக்கீறு...
இல்லை இல்லை சுற்று வெள்ளி என்றானோ... சித்திக்கு...
செகப்பு வெளிச்சம் வேற வருது என்றான் ஷேக்கு...
இவர்கள் எல்லாம் மாடிவீட்டுப் பிள்ளைகள்...
அதிகம் தெரிந்தவர்கள்... சொல்லுவது சரியாகத்தானே இருக்கும்
அமைதியாக இருந்தேன்... அன்று வயது ஆறு அல்லது ஐந்து இருக்கும்...

நன்னிம்மாவிடம் கேட்டேன்...
அது ஏதோ வண்டி என்று சொன்னார்கள்...
வாயில் நுழையாத பேரைச்சொல்லி...

இதோ நுழைந்து கொண்டிருக்கிறேன்...
சுற்றும் வெள்ளி உறுப்பினராய் சீக்கிரமாக... அவசரமாக...
அன்று நன்னிம்மா சொன்ன வார்த்தையைச்சொல்ல மறந்து விட்டேனே...
அதுதான்... அன்று வாயில் நுழையாத இன்று வாயிலில் நுழைந்து கொண்டிருக்கும்...
ஏரோபிளேன்...புரியாதோர் புரியாதோர் புரிந்து கொள்ள:
சுற்று வெள்ளி - Shooting Star
சுற்றும் வெள்ளி உறுப்பினர் - Silver Medallian Member
அத்தா - வாவா - Father (Its customery among south TN's muslims, though Vaappa might be a popular one)
நன்னிம்மா - Maternal Grandmother

Friday, April 13, 2007

கருத்தரங்கு

கற்றதைக் கற்க குழுமும் கூட்டம்...
கற்றாதோர் கலந்தால் கற்கத் தோணா கூட்டம்...
கேற்பதற்காக கேள்வி கேட்கும் கூட்டம்...
கேட்டோரும் கேட்போரும் புரியா பதில் தரப்படும் கூட்டம்...

Friday, March 16, 2007

நாட்டுப்புறப்பாடல் - 2

ஊரான் ஊரான் தோட்டத்துல...
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா...

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி...
காயிதம் போட்டான் வெள்ளக்காரன்....

வெள்ளக்காரன் பணம் வெள்ளப்பணம்...
வேடிக்கை காட்டுது அந்த வெள்ளிப்பணம்...

--- என் நன்னிம்மா (தாய் வழிப்பாட்டி) சொல்லிக் கேட்ட நாட்டுப்புறப்பாடல்

Saturday, February 03, 2007

நாட்டுப்புறப்பாடல்

ஆடு வயித்துக்கு மேஞ்சிருக்கு...
பசு மாடும் வயித்துக்கு மேஞ்சிருக்கு...

ஆட்டையும் மாட்டையும் மேச்சவன் வயிரு...
ஆல இலை போல காஞ்சிருக்கு... அண்ணே...
ஆல இலை போல காஞ்சிருக்கு...

--- எங்கோ கேட்ட நாட்டுப்புறப்பாடல்