Sunday, November 19, 2006

உன்னைத்தேடி....

ஒவ்வொன்றிலும் உன்னைப் பலமுறை பார்த்திருக்கிறேன்....
உன்னைத்தான் இன்னும் ஒருமுறைகூடப் பார்க்கவில்லை....
உலகம் ஒரு கடலை உருண்டை....
கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு - பழமொழி
இதை "கற்றது கடுகளவு கல்லாதது உலகளவு" என்று சொல்லுவதும் உண்டு...
ஆனால் நான் சொல்ல வருவது.... உலகமே ஒரு கடுகளவு...
இதோ என் அனுபவம் 1:
நான்: அஸ்ஸலாமு அலைக்கும்... [சாந்தி உண்டாவதாக...] என்றேன்... பதில் சொன்னார்... பாக்கர்...
நான்: நீங்க மதராசில்... [சென்னை] எந்த இடம்?...
பாக்கர்: ராயப்பேட்டை
நான்: நான் புதுக்கல்லூரிலதான்... படித்தேன்....
பாக்கர்: நானும் புதுக்கல்லூரிலதான்... படித்தேன்....
[புதுக்கல்லூரியைப்பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு...]
நான்: நான் படித்தது.... M-I-A மேனிலைப்பள்ளியில்...
பாக்கர்: நானும் படித்தது.... M-I-A மேனிலைப்பள்ளியில்...
ஒரு நிமிடம்.... நிறுத்து... சாஃபர் [உச்சரிப்பு - ஜாஃபர்]... இதுக்கும்... தலைப்புக்கும்.... என்ன ஓய்... சம்பந்தம்....
அட.. இருக்குங்க... இது நடந்தது.... ஆல்பெஃரட்டாவில்.... அட்லாண்டாவில்... அமெரிக்காவில்...
வேறு யாரும்... இதே போல்... எங்களைப்போல்... இல்லை... என்பது.... இருவரின் கருத்தும்....
அதுமட்டுமல்ல.... நான் அட்லாண்டாவாசியுமல்ல.....
மேலும்... சில நிகழ்வுகளுடன்... விரைவில்.....
---- சாஃபர்... [உச்சரிப்பு - ஜாஃபர்]...