என்னங்க அதிசயமா பாக்குறீங்க.... புரியுது... என்னடா எப்பவும் ஏதோ கிறுக்குத்தனமா கிறுக்கிட்டு இருப்பான்... இப்ப படம் போட்டுருக்கானே அப்டினா?...
சரி சரி... இதுக்கு என்ன பேருன்னு கேக்குறீங்களா... அதெல்லாம் தெரியாது... எனக்கு சூரப்பசி... வீட்டுக்கு வந்தா ஒன்னும் இல்ல... சரி எதாச்சும் சீக்கிராம செஞ்சு சாப்டலாம்னு குளிர்சாதனப்பெட்டியில் பார்த்தா... எதுவும் சரிப்பட்டு வரல... அப்பறமா உரைநீர் (Freezer) பொட்டியில என்ன இருக்குன்னு தேடினா உரை சமோசா (Frozen Samosa) கண்ணுல பட்டுச்சு... சரின்னு எதாச்சும் பண்ணலாம்னு...
வாணலில எண்ணைய காய வச்சு... நுண்ணலைல (Microwave) சுட வச்ச சமோசாவ... பிச்சுப்போட்டு... அப்பறம்... கொஞ்ச நேரம் வதக்கி... வெளில எடுத்து... அதுல பாதில கொஞ்சம் சிவப்பு வெங்காயம் மற்றும் தக்காளி வெட்டி போட்டு... சூட்டடுப்புல (Conventional Oven) ஒரு 10 நிமிடம் வச்சு... மீதி பாதில ஒரு முட்டைய போட்டு... சமைச்சு... ரெண்டையும் கலந்ததுதான் நீங்க பாக்குற படம்..
சாப்பாடுன்னா... பாக்க... மணக்க... சுவைக்க... நல்ல இருக்கணும்னு சொல்லுவாங்க... என்ன பொருத்தவரைக்கும்... மூணுலயுமே தேர்ச்சி பெற்று விட்டது... (பசி ருசி அறியாது!!!)
சரிங்க எனக்கு பசிக்குது... நான் போயி சாப்டுறேன்... முடிஞ்சா நீங்களும் இப்பவே வாங்க... தீர்ந்து போறதுக்குள்ள... பகிர்ந்துப்போம்....
சரி என்ன பேருன்னு எதாச்சும் சொல்லிட்டுப்போங்க...
என்ன கேட்டா... கொத்து பொராட்டா மாதிரி... கொத்து சமோசா... ?...